Menu
Your Cart

வரலாற்றில் புதைந்த உண்மைகள்

வரலாற்றில் புதைந்த உண்மைகள்
-5 %
வரலாற்றில் புதைந்த உண்மைகள்
மோ.கணேசன் (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆமை ஓட்டைக் கூரையாக கொண்ட மக்கள் என்ற கட்டுரை ஆச்சரியத்தைத் தருகிறது. மௌரியப் பேரரசில் அரசர்களின் மெய்க்காப்பாளர்களாக இருந்தவர்கள் யார் என்று பார்த்தால் பெண்களுக்கு பெருமிதம் பொங்குகிறது. சங்ககாலத்தில் அரசர்களைப் புதைத்தார்களா, எரித்தார்களா என ஆதாரத்தோடு எழுதி இருப்பதைப் படிக்கும்போது மெய்சிலிர்ப்பு ஏற்படுகிறது. நாட்டைக் கோட்டங்களாகப் பிரித்த மன்னன், பாண்டியர்களின் கொடியில் பறந்த யானை, போரில் தோற்கும் படைத்தலைவனுக்கு அரசன் தரும் மரியாதை, கழுதையைக் கொண்டு ஏர் உழுத அரசன், குடவோலை முறையின் முன்னோடிகள், தஞ்சை பெரிய கோயில் விமானத்தில் இருக்கும் தொப்பி போட்ட மனிதன் யார்? தென்னகத்தின் எல்லோரா எது? என இந்நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களை விறுவிறுப்பாக நகர்த்துகிறது. வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை அகழ்ந்தெடுத்து தக்க ஆதாரங்களோடு வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார் நூலாசிரியர். ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள இந்த நூல் உண்மையில் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பெட்டகம் என்பதில் அய்யம் ஏதுமில்லை.
Book Details
Book Title வரலாற்றில் புதைந்த உண்மைகள் (வரலாற்றில் புதைந்த உண்மைகள்)
Author மோ.கணேசன்
Publisher பாலாறு பதிப்பகம் (Palaru pathipagam)
Pages 224
Year 2025
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, வரலாற்றாய்வு நூல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha